01

போர்க்களமே எல்லையில்லை

பிரபு வெகு நாட்களுக்கு பிறகு அவன் பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு அவனது சொந்த ஊருக்கு சந்தோஷமாக கிளம்பினான்.அவன் எத்தனை நாள் இந்த சமூகத்தை விட்டு விட்டு இருக்கிறான் என அவனுக்கே தெரியவில்லை பெரிதாக பணிக்கு விடுமுறை எடுத்துவிட்டு வருவதில்லை. பணியே உயிரென இருந்தான்.அவன் நண்பன் போன முறை விடுமுறைக்கு வந்தவன் வெளியுலகத்தை பற்றி  ரொம்பவே சிலாகித்து பேசினான்.அதை கேட்டதுமே பிரபுவுக்கு ஆசை வந்தது.ரொம்ப கஷ்டப்பட்டு விடுமுறை வாங்கிவிட்டு ஊருக்கு  கிளம்பினான்.

பிரபு பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவன்.அவனது தந்தை ஒரு அரசாங்க பள்ளியின் ஆசிரியராக இருந்தார்.அவனது தாத்தாவோ சுதந்திர போராட்ட வீரராக இருந்தவர்.

அதனால் அவரது அப்பா ஒழுக்க சீலராக வளர்ந்தார் அதைவிடவும் பிரபுவை மிகவும் ஒழுக்கமாக வளர்த்தார்.எப்போழுதும் உடல் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.அவனுடைய பணி அவனுடைய ஆசை மட்டுமின்றி அவனது குடும்பத்துடைய ஆசை

விடுமுறை வாங்கி ஊருக்கு கிளம்பியவன் அந்த வண்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் அந்த பெட்டியில் ஏறி அமர்ந்தான்.

எப்போழுதும் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கும் அவன் வாழ்க்கை நிதானமானது போல் அவனுக்கு தோன்றியது.எவ்வளவு ஓடுகிறான் எவ்வளவு ஏறுகிறான்

சிறுது நேரம் கண்ணை மூடினான் தீடிரென்று அவன் பெயரை சொல்லவும் முழித்தான் அங்கு நின்றிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தனது பயணச் சீட்டை காண்பித்தான்.

அடுத்ததாக அவர் சிறுது நகரும் போது அங்கு வண்டியில் தரையில் அமர்ந்திருந்த அந்த வயதானவர் அந்த டிக்கெட் பரிசோதகரிடம் கெஞ்சினார் ஏதாவது ஒரு படுக்கை கொடுங்கள் ஐயா அதற்காக ஆகும் பணத்தை கூட தருகிறேன் என்று கெஞ்சினார் என்னிடம் சாதரண டிக்கெட் இருக்கிறது என்றார்.

அந்த டிக்கெட் பரிசோதகர் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு அவரின் உடைய பார்த்து விட்டு கத்தினார் இதிலெல்லாம் ஏறக்கூடாது இங்கெல்லாம் ஏறக்கூடாது என்றார் அடுத்த இரயில் நிலையத்திலேயே இறங்கிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் காவல்காரரிடம் பிடித்து கொடுப்பேன் என்றார்.

அந்த வயதானவரும் அடுத்த இரயில்நிலையத்திலேயே ஏதோ முணுமுணுத்தபடியே இறங்கினார்

அந்த டிக்கெட் பரிசோதகர் பிரபுவுக்கு பக்கத்துவாட்டில் ஒரு படுக்கை இருந்தது.அதில் அமர்ந்திருந்தார்.அங்கு ஒருவர் மிடுக்கான தோற்றத்துடன்  வந்தார் அவருடன் மேலும் இருவர் வந்தனர்.வந்தவர்களை பார்த்ததும் வாய் முழுக்க பல் தெரியும்படி  சிரித்தார்.அவரும் இவரை பார்த்து என்னை தெரியுமா என்றார்.பரிசோதகரும் சிறுதும் தாமதிக்காமல் என்ன இப்படி கேட்டுட்டீங்க உங்களை தெரியமலா நீங்க தான் பெரிய பேச்சாளாராச்சே நான் உங்களுக்கு ஏதாவது செய்யனுமா என்றார்

உடனே அந்த பேச்சாளர் இல்லை வர அவசரத்தில முன் பதிவு செய்யாம வந்துட்டேன் அதான் எனக்கும் என் இந்த இரு உதவியாளருக்கும் டிக்கெட் கிடைக்குமா தனியா கவனிச்சுறேன் என்றார்

உடனே டிக்கெட் பரிசோதகர் என்ன சார் உங்களுக்கு இல்லாதா என்று ஏதோ எழுதி சீட்டை கொடுத்தார் அதில் உள்ள பணத்தை கொடுத்ததுமட்டுமில்லாமல் மேலும் ஆயிரம் ரூபாயை அவரிடம் திணித்தான்

அதனை பார்க்கும் போதே பிரபுவுக்கு கோபம் கோபமாய் வந்தது அந்த டிக்கெட் பரிசோதகரை பார்த்து முறைத்தான்.அவர் அதை கண்டும் காணாததை போல எருமை மாட்டு மேல் மழை பெய்ததை போல  அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

பிரபு இப்படியே வண்டி பயணத்தை முடித்து அவனது இரயில் நிலையம் வந்ததும் இறங்கினான் அப்போழுது மேகம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

பிரபு ஒரு ஆட்டோ பிடித்து பஸ் நிலையம் வந்தான் அங்கிருந்த பேருந்தில் ஏறி பூஞ்சோலைக்கு கிளம்பினான்.வண்டி சிறுது தூரம் சென்றிருக்கும்  ஒருவர் குடையை விரித்தார் ஆமாம் பிரபுவின் மீதும் மழை சொட்டு சொட்டாய் பெய்தது.இத்தனைக்கு பிரபு பேருந்திற்குள் தான் உட்கார்ந்திருந்தான். பக்கத்திலிருந்தவன் மற்றொருவனிடம் என்ன தான் பஸ் வாங்கறாங்களோ போன மாதம் தான் ஐம்பது பஸ் வாங்கி விட்டோம் என்றார்கள் கொடியெல்லாம் அசைத்தார்கள் இங்க பாரு பஸ்ஸுக்குள்ளேயே ஒழுகிறது என்றான்

எப்படியோ பாதி நனைந்து பாதி நனையாமல் வீட்டிற்கு சென்றான்.ஆனால் மலையிலும் பனியிலும் காட்டிலும் இராப்பகல் பாராமல் அலைபவன் அவன் அப்போழுதெல்லாம் தெரியாத அவனது அந்த கஷ்டம் இப்போழுது இந்த மக்கள் ஏமாற்றப்படுகிறார்களே என நினைக்கும் போது மனதெல்லாம் வலித்தது

வீட்டிற்கு வந்தவனை அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக வரவேற்றார்கள். காலை சாபாடை சாப்பிட்டவுடன் அம்மா அவனிடம் மெதுவாக வந்து பிரபு உனக்கு இந்த வேலை கிடைத்தால் நம்ம ஊரு அம்மனிடம் கூட்டிக்கொண்டு வருவதாய் வேண்டியிருக்கிறேன் நாளை காலை போவோம் இங்கு திருவிழா வேறு ஆரம்பித்து விட்டது என்றாள்.

பிரபுவுக்கு அந்த கோவிலை நினைக்கும் போதே மெய்சிலிர்த்தது.ஆமாம்  அவனது வேலைக்கான எல்லாத் தேர்வையும் முடித்துவிட்டு காத்திருந்த போது அவனே தினமும் அந்த அம்மனை பார்க்கச் செல்வானே அவ்வளவு சக்தி வாய்ந்த அம்மன்

அடுத்த நாள் காலை மூவரும் கோவிலுக்கு போனார்கள் அங்கு ஒரே கூட்டம் மக்கள் எல்லோரும் வரிசையில் இரண்டு மணிநேரம் மூன்று மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டிருந்தனர்

அங்கு வந்த அந்த ஊர் எம்எல்ஏ எல்லோரையும் கிண்டலாய் ஒரு பார்வை பார்த்து விட்டு ஏதோ அவர் வீட்டிற்குள் போவதை போல அத்தனை கூட்டத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றார்.அவர் மட்டுமா அவருடன் சேர்த்து அவருடைய அன்னக்கை மன்னக்கை என்று இருபது பேர் உள்ளே சென்றனர் பிரபுவுக்கு இதை பார்க்கும் போதே கோபம் கோபமாய் வந்தது.

கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள் பக்கத்து வீட்டில் ஒரே  சத்தம்  பிரபு அம்மாவிடம் என்னவென்று கேட்டான்.இல்லைடா பக்கத்து வீட்டு பையனுக்கு ரொம்ப நாளா வேலை கிடைக்கவில்லை ஏதோ அரசாங்க வேலை என்று ஆசைப்பட்டு சில லகரங்களை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்தாராம் அவர் அப்பா அதை அந்த அரசியல்வாதி ஏப்பம் விட்டுட்டார் போலிருக்குடா என்றாள்.

இதை கேட்டதும் பிரபுவுக்கு இரத்தம் எல்லாம் கொதித்தது இவர்களுக்காகவா இராப்பகல் பாராமல் அந்த பனியில் நிற்கிறேன் என நினைக்கும்போதே அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது

அடுத்த நாள் அதிகாலை நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றான் அந்த அதிகாலை வேலையில் அந்த குடிசை போலிருந்த ஓரிடத்திலிருந்து நாலைந்து பேர் வெளியே வந்தார்கள் அவர்கள் கையை பார்த்து அதிசியத்தே விட்டான் ஆமாம் அத்தனை பேர் கையிலும் சாராய பாட்டில்கள் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிகொடுத்த காந்தியையும் அதற்காக பாடுபட்ட தன் தாத்தா போல பல பேரையும் நினைத்து கொண்டான்.

வீட்டிற்கு வந்தான் அலைபேசி அடித்தது எதிர்முனையில் அவன் சித்தப்பா பேசினார்.என்ன பிரபு எப்படி இருக்க ஒன்னுமில்லை உன் தங்கைக்கு அதான் என் பெண்ணுக்கு இருபது லட்சம் டோனேஷன் கொடுத்து அந்த கல்லூரியில் இடம் வாங்கிவிட்டேன் அதான் அப்பாவிடம் சொல்லலாம் என்றார் பிரபுவுக்கு தூக்கிவாரிப்போட்டது என்னது இருபது லட்சம் கொடுத்தால் சீட்டா என்று பிரபுவுக்கு திக்கென்றிருந்தது

நண்பகலில் அங்கிருந்த நண்பண் ஒருவன் வீட்டிற்கு சென்றான்.அவன் சொன்னது பிரபுவுக்கு இன்னும் அச்சத்தை தந்தது அவன் சொன்னான் அவனின்  சொந்தகாரர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டாராம் அவரது உடலை மார்ச்சுவரியில் எடுத்து வர ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்று

அன்று இரவு வெளியே சென்று விட்டு வந்துகொண்டிருந்தான் அது இரவு பதினொறு மணி தாண்டியிருக்கும சற்று தொலைவில் ஒரு பெண்ணை மூன்று பேர் சேர்ந்து துரத்துவது தெரிந்தது பிரபு முடிவெடுத்தான் அவன் ஓடினான் அவர்களை துரத்தினான்.அவர்களை பிடித்துக்கொண்டு போய் காவல் நிலையத்தில் நிறுத்தினான்.அந்த பெண் பிரபுவை கையெடுத்து கும்பிட்டாள்.

காவல் நிலையத்தவர்களை பார்த்த காவல்காரர் என்ன இவர்கள் மீதெல்லாம் கேஸெல்லாம் போட முடியாது முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள்.

நான் யாரென்றா கேட்கிறாய் இராப் பகலாய் கண்முழித்து காடு மலை என பாராமல் மழை வெய்யில் என பாராமல்  பனி பாலைவனம் என பார்க்காமல் நாட்டிற்கு உயிரை கொடுத்து நாட்டின் எல்லையை காக்கும் மக்களின் சுதந்திரத்தை காக்கும் ஏன் இத்தனை அராஐகம் செய்யும் உங்களை கூட எதிரி நாட்டினரிடமிருந்து காக்கும் இராணுவ அதிகாரி.என்றான் உடனே அந்த காவல் அதிகாரி பிரபுவுக்கு ஒரு பெரிய வணக்கம் சொல்லிவிட்டு என்ன ஆனாலும் பராவயில்லை சார் இந்த கேஸை நான் புக் செய்கிறேன் என்றார் பிரபு ஒரு பெரிய நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்

அடுத்த நாள் அவனுக்கு எல்லையிலிருந்து அழைப்பு எதிரி நாட்டினர் தாக்குதல் என்று.பிரபு மனதிற்குள் நினைத்துக்கொண்டான் எதிரி நாட்டின் தாக்குதலை கூட தடுத்து விடலாம் போலிருக்கிறதே.நாட்டிற்குள் இருக்கும் இந்த மாதிரி சமூக விரோதிகளின் தாக்குதல்களிலிருந்து நாட்டை எப்படி காப்பாற்றுவது என்று

அங்கே அம்மன் கோவிலிருந்து பாடல்

எங்கும் நிறைந்தவளே

உன்னால் முடியும்

உன்னால் மட்டும் முடியுமென்று

Story Completed

You've reached the end of this journey.

1Chapters Read

Write a comment ...

Write a comment ...

Padmanabhan

அன்பான தமிழ்சொந்தங்களே பத்மநாபன் என்ற நான் விருதுநகர் என்ற நகரை சேர்ந்தவன்.எனக்கு.சிறு வயது முதலே கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம்.நான் பல கதைகள் எழுதியிருந்தாலும் இத்தளத்தில் இது தான் எனது முதல்தொகுப்பாகும்.படித்து உங்கள் கருத்தை சொல்லி ஊக்கப்படுத்துங்களேன்