
பிரபுவின் அப்பாவுக்கு அவனை பார்க்கவே பெருமையாக இருந்தது.எத்தனை நாள் ஆசை சிறு வயது முதலே மகனிடம் சொல்லி சொல்லி வளர்த்ததாச்சே.
பிரபு பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவன் அங்கிருந்த மாந்தோப்புகளிலும் ஆற்றங்கரையிலும் நண்பர்களுடன் நண்பிகளுடனும் சேர்ந்து குதி குதியென்று குதித்திருக்கிறான்.
பிரபுவின் அப்பா அரசியலில் ஆர்வமாய் இருந்தார் .ஆர்வமாய் இருந்தார் என்று தான் சொல்லலாமே தவிர அதில் நுழைய ரொம்பவே பயந்தார்.
ஆனால் அவரும் விடவில்லை நண்பர்களுடன் சேர்ந்து அந்த ஊரில் நடக்கும் எல்லா கட்சி கூட்டத்திற்கும் போவாராம் அதனால் தாத்தாவிடம் கூட திட்டு வாங்கியிருப்பதாய் பிரபுவிடம் பல முறை அவரே சொல்லியிருக்கிறார்.
ஆனால் இருக்கிற வருமானத்தையும் விட்டு விட்டு அரசியலில் இறங்கினால் யார் அவர் வீட்டையும் குடும்பத்தையும் யார் காப்பாற்றுவார்
அவர் பல முறை சொல்லுவார் நாட்டு மக்களுக்காக எல்லையில் காப்பவன் இராணுவ வீரன் நாட்டிற்குள் இருந்து காப்பவன் அரசியல்வாதி.இந்தியா போன்ற குடியரசு நாட்டில் ஒவ்வொருடைய உரிமையையும் காப்பது அவர்கள் தான் என அவர் காலத்து அரசியல்வாதி பெயரையெல்லாம் சொல்வார்.
அப்போழுதெல்லாம் பிரபுவுக்கும் ஆசையாய் தானும் ஒரு எம் எல் ஏ வோ ஆகிவிடமாட்டோமா என நினைத்தான்
அவனது கிராமத்தின் அருகிலிருந்த நகரத்தில் படித்தான் அங்கு கல்லூரியில் மாணவர்கள் தலைவர் செயலாளர் துணை செயலாளர் என்ற தேர்தல் நடக்கும்.பிரபுவுக்கு அதிர்டவசமாக அவன் மூன்றாம் வருடம் படிக்கும் போது அவனது வகுப்பில் அந்த ஊரின் பக்கத்து நகரத்திலிருந்த பெரிய அரசியல் தலைவரின் மகன் படித்தான்.அவனது நட்பு பிரபுவுக்கு கிடைக்கவே அவனது குழுவிற்காகவே அந்த அரசியல்வாதியின் பையன் தலைவனாக நிற்க பிரபு செயலளராக நின்றான்.
அந்த கல்லூரியில் அந்ந தேர்தலுக்கே வாக்குறுதியெல்லாம் கொடுக்க வேண்டும்.பிரபுவின் குழுவினர் கல்லூரியில் படிக்கும் ஹாஸ்டல் மாணவர்களுக்கு தினமும் முட்டையோடு அவர்களுக்கு வாரத்திற்கு இருமுறை கரிசோறு போட வைப்போம் என்றனர்.
இதற்கெல்லாம் அப்பா ஊக்கம் தான் கொடுத்தாள் அம்மா தான் திட்டினாள் என்னடா இது பிழைப்பு கண்ட கண்ட அரசியல் வாதி பொறுக்கிகளோடெல்லாம் சேர்ந்து கொண்டு எனக்கென்னவோ சரியாய் படவில்லை என்றாள் அப்போழுதெல்லாம் பிரபுவின் அப்பா தான் சப்போர்ட்டுக்கு வருவார்
இப்படியே போய் கொண்டிருந்தது பிரபு கல்லூரி படிப்பையும் முடித்தான் இருந்தும் அந்த அரசியல்வாதி மகனுடன் மட்டும் தொடர்பை முடிக்கவில்லை.அதனால் அவனுடைய அரசியல் கட்சியில் சேர்ந்தான்.முதலில் சிறிய அளவில் வட்டச்செயலாளராக சதுரச் செயலாளராக இருந்தவன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி அவனது ஊரின் எம் எல் ஏ வாக மாறினான்
பிரபுவின் அப்பாவுக்கு பெருமிதம் தாங்கவில்லை தனக்கு கிடைக்காதது தனது பிள்ளைக்கு கிடைத்ததை நினைத்து பெருமை கொண்டான் அந்த காலத்து photo வில் தொங்கும் தலைவர்களுக்கு நன்றி சொன்னான்.
தனது பிள்ளையும் இந்த சமுதாயத்திற்கே நல்லது செய்யப் போகிறான் அவனும் பல இடங்களுக்கும் சென்றான் பல நேரம் இரவில் வீடே வராமல் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பான்.
அதற்கெல்லாம் மகுடம் வைத்ததை போல இன்று மகளிர்பாதுகாப்பிற்காக அவனது தொகுதி முழுவதும் பல டாய்லெட்டுகளையும் பஸ்நிறுத்தங்களையும் முதன்முதலில் அவன் எம்எல்ஏ ஆனதும் கட்டினான் அந்த ஊரே பாராட்டியது ஏன் அவன் கட்சியின் தலைவரே பல இடங்களில் வந்து திறந்துவைத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
அப்படித்தான் அந்த திட்டத்தை தனது மகன் தொகுதியிலிருந்து திறந்து வைத்ததை பெருமையாக தனது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.அடுத்தது பார் சுத்தமான தண்ணீர் வீட்டிற்கே கொடுக்கப்போகிறான் என்றான்.இது இந்த குடிமக்களின் உரிமை அதை நிறைவேற்றுவது இவனது கடமை என்றான் இதில் என் மகன் கிங் என்றான்
இது முடிந்து பிரபுவின் அப்பா அடுத்த நாள் காலை செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தான்.ஒருவன் முதலாளி போல இருந்தவன் மகனை பார்க்க வேண்டும் என்றான்
அடுத்த அறையை காண்பித்தான்.அந்த நபர் கையில் வைத்திருந்த பெட்டியுடன் உள்ளே சென்றான்.சற்று நேரம் கழிந்திருக்கும் மகன் கத்துவது கேட்டது என்னது ஐந்து லட்சம் கொண்டு வந்திருக்கிறாய் பத்து லட்சம் இல்லையா கேட்டேன் என்றான் .உடனே அவன் அடுத்த தவணையில் தந்து விடுகிறேன் என்று கெஞ்சினான்.
பிரபுவின் அப்பாவுக்கு விவரம் புரிந்தது.அப்போழுது பார்த்து பெரிய காற்று அந்த காலத்து தலைவர்கள் போட்டோ பலமாக ஆடியது அதில் இருப்பவர்கள் பிரபுவின் அப்பாவை பார்த்து பலமாக சிரிப்பது போல இருந்தது.அப்பா தலையில் அடித்துக்கொண்டார்.
அடுத்த பிரபுவின் அறையின் வாசலை பார்த்தார் அங்கே ஒரு வாசகம் பிரபுவின் அப்பாவின் கண்ணில் பட்டது
When you are in rone you should be roman என்றிருந்தது
பிரபுவின் அப்பா அதை பார்த்து சிரித்துக்கொண்டான்

Write a comment ...